எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்படவுள்ள புகையிரத சேவைகள்…

புகையிரத பாதையில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாக, மதவாச்சி மற்றும் தலைமன்னார் ஆகிய பகுதிகளுக்கிடையிலான புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி முற்பகல் 9.52 முதல் மார்ச் 2 ஆம் திகதி பிற்பகல் 2.20 வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தலைமன்னார் மற்றும் மதவாச்சிக்கிடையில் விசேட பேருந்து சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.