முன்னாள் கடற்படைப் பேச்சாளருக்கு எதிரான விசாரணையினை CID இடமிருந்து அகற்றுமாறு கோரிய கோரிக்கை நிராகரிப்பு..

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைப் பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்கள் 09 பேருக்கும் எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை நீக்குமாறு கோரி பிரதிவாதிகளது தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இன்று(22) குறித்த உத்தரவினை பிறப்பித்திருந்ததோடு, பிரதிவாதியினரின் கோரிக்கையினை ஏற்கும் சட்டரீதியான அதிகாரம் நீதிவான் நீதிமன்றிற்கு இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

2008 ஆம் ஆண்டு கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணையின் போது 08ம் மற்றும் 09ம் சந்தேக நபர்கள் முன்வைத்திருந்த பிணை மனுக்களும் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 08ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் லங்கா ஜெயரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தற்போது பிணையில் உள்ள முன்னாள் கடற்படைப் பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்கள் 07 பேருக்கும் மே மாதம் 03ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாரும் நீதிமன்றம் மேலும் தெரிவித்துள்ளது.

#rishma