அமைச்சரவை மாற்றம் இன்று(23) மாலை – பிரபல மாற்றங்கள் பல…

அமைச்சரவை மாற்றம் பெரும்பாலும் இன்று(23) மாலை இடம்பெற வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சிக்கு உரித்தான அமைச்சுப் பதவிகளிலான மாற்றம் உள்ளிட்ட அமைச்சர்களது பெயர்கள் அடங்கிய பட்டியல் நேற்று(22) இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இராஜாங்க அமைச்சர்களான ரவீந்திர சமரவீர, சுஜீவா சேனசிங்க, பிரதி அமைச்சர்களான ஹர்ஷ டி சில்வா, அஜித் பீ.பெரேரா ஆகியோர் அமைச்சரவை அற்ற அமைச்சர்களாக நியமிக்க அதிகளவு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறே, முன்மொழியப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலரது அமைச்சுக்கள் மாறவும் வாய்ப்பு உள்ளதோடு, மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர ஆகிய அமைச்சர்களுக்கு அதிகளவான பொறுப்புக்கள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

#rishma