நாட்டில் நிலவுகின்ற வறட்சியான காலநிலையில் நாளை(24) முதல் சிறிய மாற்றம் ஏற்படலாமென்று வளமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவாமாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யக் கூடும் எனவும் காலி, மாத்தறை , களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையிலான கடற்கரையோர பகுதிகளில் ஓரளவு மழை பெய்யக் கூடும் எனவும் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் இடிமின்னலின்போது பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.