10 இலக்க தொலைபேசி எண்கள் இனி 13 இலக்கமாக மாற்றம்..

நடைமுறையில் உள்ள 10 இலக்க தொலைபேசி எண்களுக்கு மாற்றாக 13 இலக்க தொலைபேசி எண்களை வழங்க தயாராகுமாறு இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

BSNL நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இவ்வாண்டு ஜனவரி மாதம் குறித்த இந்த சுற்றறிக்கை கிடைக்கப் பெற்றதாக தெரிவித்தார்.

தற்போது பயன்பாட்டில் உள்ள 10 இலக்க தொலைபேசி எண்கள் அனைத்தும் எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் 13 இலக்க எண்களாக மாற்றப்படும்.

அக்டோபர் மாதம் முதல், வாடிக்கையாளர்கள் வாங்கும் தொலைபேசி எண்கள் 13 இலக்க எண்களை கொண்டதாக இருக்கும், இந்த மாற்றத்தை இந்த வருடத்துக்குள் செய்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால் சீனாவுக்கு அடுத்து நீளமான செல்பொன் எண்களை உடைய நாடக இந்தியா இருக்கும். தற்போது சீனாவில் 11 இலக்க எண்கள் பயன்பாட்டில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma