அமைச்சரவை திருத்தத்தில் அமைச்சுப் பதவியிலிருந்து நீங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்டர்கள் சிலருக்கு கட்சியின் தலைவரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன..
அதற்கு குறித்த சிரேஷ்டர்களால் கடும் அதிருப்தியும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்போது அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளதோடு, தான் அமைச்சுப் பதவியில் இருந்து விலகியது பிணை முறி விவகாரத்திற்கு அல்ல எனவும் தனிப்பட்ட காரணத்திற்கு எனவும் அதனை விடவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்ததாக கூறப்படுகின்றது.
அவர்கள் பதவி விலகாதவிடத்து தனக்கும் அமைச்சுப் பதவி வேண்டும் எனவும் தெரிவித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்வாட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#g-rishma