பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு – 20 போட்டிகளின் ஆரம்ப போட்டியில் 07 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கொள்ள, குமார் சங்கக்கார பிரதிநிதித்துவப்படுத்தும் Multan Sultans அணிக்கு நேற்று(22) வாய்ப்புக் கிட்டியது.
நாணயற் சுழற்சியில் வெற்றி பெற்ற Sultans அணி முதலில் துடுப்பெடுத்தாட Peshawar Zalmi அணிக்கு வாய்ப்பினை வழங்கியது. குறித்த 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்களை இழந்து 151ஓட்டங்களை கைப்பற்றியது.
பதிலுக்கு துடுபெடுத்தாடிய Multan Sultans அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கினை அடைந்தது.
இதில் Sultans அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்கார அணியின் வெற்றிக்காக 51 பந்துகளுக்கு 57 ஓட்டங்களை குவித்திருந்தார்.
இந்நிலையில், சிறப்பு ஆட்டக்கார விருது குமார் சங்கக்காரவுக்கு கிடைக்கப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
புள்ளி விபரம்…


#rishma