ஆசிரியர்கள் எனும் போது இலங்கையிலுள்ள ஆசிரியர்கள் குறித்து இந்நாட்களில் அதிகளவு பேசப்படுகின்றமை யாவரும் அறிந்ததே.. அது அரசியலாக இருக்கட்டும் இன்றேல் வேறு காரணிகளாகவும் இருக்கலாம்..
இதனால் ஆசிரியர்கள் பலவித இன்னல்களுக்கும் முகங்கொடுக்க நேரிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கதே..
ஆனால், நாம் இங்கு கூறப்போவது இலங்கை ஆசிரியர்கள் குறித்து அல்ல. குறித்த சம்பவம் அமெரிக்கா ஆசிரியைகளுக்கு…
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 மாணவர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை அடுத்து துப்பாக்கி நடமாட்டத்தை கட்டுபடுத்துவது தொடர்பாக டிரம்ப் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சாதாரண தானியங்கி துப்பாக்கியை எந்திர துப்பாக்கியாக மாற்றக்கூடிய பம்ப்ஸ்டாக் என்ற கருவியை பயன்படுத்த டிரம்ப் தடை விதித்துள்ளார்.
இந்த நிலையில் பள்ளி துப்பாக்கி சூடு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களை டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேசினார். அதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் துப்பாக்கி சூட்டில் பலியான மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது அவர்களிடம் பேசிய டிரம்ப் பள்ளிகளில் துப்பாக்கி சூடு சம்பவம் நடக்காமல் இருக்க இனி ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
#g-rishm