இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு கிலோவொன்றுக்கான தீர்வை 29 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
இன்று(23) நள்ளிரவு முதல் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஒரு ரூபாவாக இருந்த குறித்த இறக்குமதி தீர்வையானது 29 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 30 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்குடன் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை இந்த தீர்வை அதிகரிப்பு அமுலில் இருக்கும் என நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.