நிலவும் வறட்சியின் காரணமாக களுத்துறையில் குடிநீர் பிரச்சினை…

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக களு கங்கையுடன், கடல்நீர் சேருகின்றதால், களு கங்கையை அண்டிய சில பிரதேசங்களில் வாழும் மக்கள் பயன்படுத்தும் குடிநீர், அருந்துவதற்கு உகந்ததல்ல என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

வாத்துவ, வஸ்கடுவ, களுத்துறை – வடக்கு, களுத்துறை – தெற்கு, நாகொடை மற்றும் போம்புவல முதலான பிரதேசங்களுக்கு குறித்த இந்த நிலைமை தாக்கம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிலிமத்தலாவை, பயாகல, மக்கொன, பேருவளை, அளுத்கம, தர்கா நகர் மற்றும் பெந்தரை முதலான பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் அருந்துவதற்கு உகந்ததல்ல எனவும், குறித்து நீரை வேறு நாளாந்த கடமைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குடிநீர் தேவையான பகுதிகளுக்கு கொள்கலன்கள் மூலமாக குடிநீரை விநியோகம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 

#rishma