இலங்கை மற்றும் இந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையான ‘எட்கா’ கைச்சாத்திடுவதில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதால் குறித்த முயற்சியை அரசு தற்காலிகமாக ஒத்திவைக்க வாய்ப்புக்கள் அதிகம் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை மாற்றத்தின் போது மேற்படி விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சுப் பதவியிலும் மாற்றம் ஏற்படும் என்பது உட்பட மேலும் சில முக்கிய காரணிகளைக் கருத்திற் கொண்டே அரசு இந்த முடிவுக்கு வந்திருக்கின்றதாக மேலும் தெரிவிக்கபப்டுகின்றது.
#rishma