சர்வதேச சூரிய சக்தி உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதிக்கு அழைப்பு…

புது டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, சர்வதேச சூரிய சக்தி உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த அழைப்பினை இந்திய பிரதமரும் பிரான்ஸ் ஜனாதிபதியும் இணைந்து விடுத்துள்ளதோடு, குறித்த இந்த அழைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரடியாக கையளிக்கப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் விடுத்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியாக இந்த மாநாட்டில் 500 பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளவுள்ளதோடு, அவர்களில் 30 அரச தலைவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சூரிய சக்தி இணக்க ஒப்பந்தத்தில் 54 நாடுகள் கைச்சத்திட்டுள்ளன.

இலங்கை இந்த ஒப்பந்தத்திற்கு கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதியே, கைச்சாத்திடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், குறித்த இந்த திட்டத்தின் கீழ் எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களை, முதலீடாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

 

#rishma