கனடாவில் ஆபாச நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர் சன்னி லியோன். பிறகு இந்தி படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஏற்கனவே தமிழில், ‘வடகறி’ படத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்டார் சன்னி லியோன்.
தற்போது அவர் ஹீரோயினாக நடிக்கும் படம், ‘வீரமாதேவி’ என்ற பெயரில் உருவாகிறது. இதில் ராணியாக நடிக்கிறார். இப்படத்துக்கு 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். குதிரையேற்றம், கத்தி சண்டை பயிற்சிகள் பெற்று வருகிறார்.
சன்னி லியோன் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர். இந்தியில் நடித்தாலும் அம்மொழியில் ஒன்றிரண்டு வார்த்தைகளே தெரிந்து வைத்திருக்கிறார். ஷூட்டிங்கின்போது இயக்குனர் சொல்லித்தரும் வசனங்களை பேசிவிட்டு ஒதுங்கிவிடுவார்.
இந்தி மொழியை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டாத சன்னிலியோன் தமிழ் மொழியை கற்க முயற்சி மேற்கொண்டிருக்கிறார். தமிழ் வசனங்களை பேசி நடிப்பதில் ஆர்வம் காட்டுவதாக ‘வீரமாதேவி’ பட தரப்பு தெரிவிக்கிறது. வடிவுடையான் இயக்குகிறார். நவ்தீப், நாசர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.