கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சைக்கான விண்ணப்ப விநியோகம் இன்று(26) ஆரம்பமாகிறது என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 2ம் திகதி வரை நாடு பூராகவும் உள்ள 18 மத்திய நிலையங்களில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை பரீட்சை , உற்பத்தி மற்றும் கட்டுமானத்துறை தொடர்பில் இடம்பெறவுள்ளதாக வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் குறித்த பரீட்சை கணணி மூலமாக இடம்பெறவுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கையொன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.