பொல்கஹவெல, படேகும்புர பகுதியில் நேற்றிரவு(25) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டினுள் இருந்த நபர் ஒருவர் மீது இனந்தெரியாத ஒருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட பின் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர், பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரேத பரிசோதனை இன்று நடைபெற உள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொல்கஹவெல பொலிஸால் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.