ஒவ்வொருவருக்குமே நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதிலேயே பலர் முதுமையான முகத் தோற்றத்தைப் பெற்றுவிடுகிறார்கள்.
கிவி மற்றும் அவகேடோ:
கிவி பழத்தை இரண்டாக வெட்டி, அதன் ஒரு பாதியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதேப் போல் அவகேடோ பழத்தின் ஒரு பாதியையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். 30 நிமிடம் நன்கு ஊற வைத்த பின், வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இறுதியில் முகத்தை துணியால் துடைத்து, மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.
பப்பாளி, அன்னாசி மற்றும் தர்பூசண:
பேக் மிக்ஸியில் சிறிது பப்பாளி, அன்னாசி மற்றும் தர்பூசணி போட்டு நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இறுதியில் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் சருமம் இளமையுடன் காட்சியளிக்கும். இந்த செயலை அடிக்கடி செய்தால் நல்ல பலனைக் காணலாம்
வெள்ளரிக்காய் மற்றும் முட்டை :
முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் சிறிது வெள்ளரிக்காயைப் போட்டு அரைத்து, வெள்ளைக்கருவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அதன் பின் அத்துடன் சில துளிகள் விருப்பமான நறுமண எண்ணெய் எதையாவது சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்பு அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இறுதியில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி, துணியால் முகத்தைத் துடைத்து, மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும்.
முட்டை வெள்ளைக்கரு:
ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு முட்டையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி குறைந்தது 30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இறுதியில் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, துணியால் முகத்தைத் துடைத்து, மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
தேன், பேக்கிங் சோடா மற்றும் க்ரீமி பால்:
ஒரு பௌலில் க்ரீமி பால், தேன் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இறுதியில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். பின் துணியால் முகத்தைத் துடைத்து, மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.
கேரட் மற்றும் கொய்யா:
ஒரு பௌலில் பாதி கேரட் மற்றும் 1 கொய்யாப் பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதன் பின் வறட்சியைத் தடுப்பதற்கு மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்