பாகிஸ்தானின் அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் உயர்மட்ட குழு இலங்கைக்கு…

பாகிஸ்தானிலுள்ள அரிசி ஏற்றுமதி சங்கம் இலங்கைக்கு உயர் மட்ட குழுவொன்றை அனுப்ப இருப்பதாக அச்சங்கத்தின் துணைத்தலைவர் ரஃபீக் சுலைமான் தெரிவித்துள்ளார்.

சங்க உறுப்பினர் சிலர் சமீபத்தில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தை அடுத்து குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைப்பின் நிர்வாக குழுக்கூட்டத்தில் துணைத்தலைவர் கடந்த சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது இலங்கை அதிகாரிகளிடம் பாகிஸ்தானிலிருந்து நீண்டகாலத்திற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசி உள்ளிட்ட தானியங்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்குமாறு தமது அமைப்பினர் கேட்டுகொண்டதாகவும் . துணைத்தலைவர் ரஃபீக் சுலைமான் தெரிவித்துள்ளார்.