பிரிட்டனில் பயங்கர வெடிவிபத்து – 4 பேர் உயிரிழப்பு…

பிரிட்டனின் லெய்செஸ்டர் நகரில் உள்ள கட்டிடத்தில் நேற்றிரவு(25) ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பிடித்ததால் அந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள கடை மற்றும் அதற்கு மேற்பகுதியில் உள்ள ஒரு வீடு கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பலத்த காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிலதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பயங்கரவாதத்துடன் தொடர்பு எதுவும் இருப்பதாக தெரியவில்லை என பிரிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. வெடிவிபத்துக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.