வான்பரப்பில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடை மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனைய இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், கிழக்கு, ஊவா, மத்திய தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில பகுதிகளில் (100 மி.மீக்கும் அதிகமான) பலத்த மழைபெய்யக்கூடும் எனவும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு40 கிலோமீற்றர்வரையிலான) ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதுடன் மின்னல் தாக்கங்களில் இருந்து மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டளவியள் திணைக்களம் இன்று(27) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது