வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர்களான எஸ்.எம்.எ. நியாஸ் மற்றும் சபாரட்ணம் குகதாஸ் ஆகியோர் இன்று(27) பதவிப் பிரமாணம் செய்து கொண்டதை தொடர்ந்து முதன் முதலாக அவைக்கு வருகை தந்திருந்தனர்.
யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இன்று(27) 117 ஆவது அமர்வு ஆரம்பமாகியது. அதன் போது, இரு உறுப்பினர்களும் அவைத் தலைவரினால் சபைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
வட மாகாண சபையின் உறுப்பினராக இம்மானுவேல் ஆர்னோல்டிற்குப் பதிலாக ரெலோ கட்சியின் உறுப்பினராக சபாரட்ணம் குகதாஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸஸின் இருந்த றயிஸ் ராஜினமா செய்து கொண்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிதாக எஸ்.எம்.எ. நியாஸ் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இருவரும் தமது கன்னியுரையினை சபையில் ஆற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(யாழ் நிருபர் சுமித்தி, தீபன்)