சிரியாவில் இரசாயன ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களை வட கொரியா அனுப்பி வருவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்களின் தகவல்களை சுட்டிக்காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
எசிட் எதிர்ப்பு உபகரணங்கள் மற்றும் குழாய்களும் இவ்வாறு வடகொரியாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வடகொரியாவின் ஏவுகணை தயாரிப்பு வல்லுநர்களையும் சிரியாவில் உள்ள ஆயுத உற்பத்தி மையங்களுக்கு அனுப்பியுள்ளதாக நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிரியா அரசாங்க படையினரால் தாக்குதல்களின் போது குளோரின் வாயு பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வௌியானதை தொடர்ந்து அமெரிக்க ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள் வௌியாகியுள்ளன.