காணாமல் போனோர் தொடர்பான பணியகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் நியமிப்பு…

காணாமல் போனோர் தொடர்பான பணியகத்தின் பிரதிநிதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

இது தொடர்பான நியமனக் கடிதங்கள் குறித்த தரப்பினருக்கு ஜனாதிபதி செயலகத்தால் நேற்று(28) அனுப்பிவைக்கப்பட்டதாக அமைச்சர் மங்கள சமரவீர தமது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தப் பணியகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதோடு,
ஜயதீபா புன்னியமூர்த்தி, மேஜர் ஜெனரல் மொஹந்தி ஏ. பீரிஸ், சிரியானி நிமல்கா பெர்னாண்டோ, மிரக் ரஹீம், சோமரிசி கே லியனகே மற்றும் கணபதிபிள்ளை வேந்தன் ஆகியோர் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று ஆண்டு காலப்பகுதிக்காக இந்தப் பிரதிநிதிகள் நியமனம் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தை நிறுவுவதற்காக 2018 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் 1.3 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல்போனோர் தொடர்பான பணியக சட்டமானது கடந்த 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்டபோதும், குறித்த பணியகம் தற்போதே நிறுவப்பட்டுள்ளது.

எனினும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒரு வருடத்துக்கும் மேலாக தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.