ராஜாங்கனை ஒன்றிணைந்த விவசாய அமைப்பின் தலைவரை நேற்று(01) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் குடிநீர் திட்டத்தை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் குழப்ப நிலையை ஏற்படுத்திய மேலும் பலரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 50 பேர் இம்மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.