இந்த ஒரு மாஸ்க் பருக்களால் வந்த தழும்புகளை உடனே மறையச் செய்யும்…

ஒருவருக்கு முகப்பரு வந்தால், அந்த பரு போவதற்குள் முகத்தின் அழகே பாழாகிவிடும். எனவே பலரும் முகப்பருக்களைப் போக்க கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் பருக்கள் மறைந்திருக்காது.

கிள்ளி விடுவதால், பருக்கள் அவ்விடத்தில் கருமையான தழும்புகளை உண்டாக்கும். பருக்கள் இருக்கும் போது கூட முக அழகு பாதிக்கப்படாது. ஆனால் அது போகும் போது விட்டு செல்லும் கருமையான தழும்புகள் தான், சரும அழகையே மோசமாய் காட்டும். இந்த பருக்களைப் போக்க ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன. குறிப்பாக நம் வீட்டு சமையலறையில் உள்ள பல பொருட்கள் முகப்பருக்களை மாயமாய் மறையச் செய்யும்.

தேவையான பொருட்கள்:
பட்டைத் தூள் – 1/2 டீஸ்பூன்
பூந்திக்கொட்டை பொடி – 1/2 டீஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

செய்முறை: ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை ஒரு துணி பயன்படுத்தி, கண்களில் படாதவாறு முகத்தில் தடவ வேண்டும். இந்த மாஸ்க்கை 20 நிமிட்ம் ஊற வைக்க வேண்டும். ஒருவேளை எரிச்சலை தாங்க முடியாவிட்டால், குறைந்தது 10 நிமிடம் வைத்திருக்கவும். இறுதியில் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்போது பருக்களால் வந்த தழும்புகளைப் போக்க உதவும் வேறு சில இயற்கை வழிகளையும் காண்போம்.

வெள்ளரிக்காய் சாறு:
முகப்பருக்களால் வந்த தழும்புகளை மறையச் செய்வதற்கு வெள்ளரிக்காயை அரைத்தோ அல்லது அதன் சாற்றினையோ, தழும்புள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் காய வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என தினமும் செய்து வந்தால், விரைவில் தழும்புகளைப் போக்கலாம்.

முட்டை வெள்ளைக் கரு:
முட்டையின் வெள்ளைக்கருவை இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுங்கள். இதனால் முட்டையில் உள்ள புரோட்டீன், பாதிக்கப்பட்ட சரும செல்களை விரைவில் சரிசெய்துவிடுவதோடு, தழும்புகளையும் மறையச் செய்யும்.