கொழும்பு மாநகர ஆணையாளர் வீ.கே.ஏ.அனுரவை பதவி நீக்க, மேல்மாகாண ஆளுநர் கே.சீ.லோகேஸ்வரன் தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.
மேல்மாகாண ஆளுநரின் செயலர் இந்த தகவலை வழங்கியுள்ளார். நீதிபதி சந்திரதாஸ நாணயக்கார தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்த அறிக்கையின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.