இன்று(05) முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நிலவும் மழையுடனான காலநிலை தற்காலிகமாக குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எனினும் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.