2018 ஆஸ்கர் விருது – சிறந்த படம் உள்ளிட்ட 3 ஆஸ்கர் விருதுகளை வென்ற The shape of water…

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகின்ற 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் த ஷேப் ஆப் வாட்டர் படத்திற்கு சிறந்த படம் உள்ளிட்ட 3 விருதுகள் கிடைத்துள்ளது.

இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணியளவில் ஆரம்பமான இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்குகிறார்.

இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். இதில் இந்த ஆண்டுக்கான சிறந்த படமாக ஷேப் ஆப் வாட்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 13 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஷேப் ஆப் வாட்டர் படத்திற்கு 3 விருதுகள் கிடைத்துள்ளது.

சிறந்த படம் – த ஷேப் ஆப் வாட்டர்

சிறந்த இயக்கம் – கில்லர்மோ டெல் டோரோ

தயாரிப்பு வடிவமைப்பு – பால் தென்கம் ஆஸ்டர்பெர்ரி, செட் வடிவமைப்பு – ஷேன் வியூ மற்றும் ஜெப்ரி ஏ.மெல்வின்.