கடந்த 28 ஆம் திகதி தம்புத்தேகம பொலிஸ் சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 51 பேரையும் பிணையில் விடுதலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராஜாங்கனை குளத்தை சுற்றி 17,000 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் ராஜாங்கனை குளத்தை குடிநீர் போத்தல்களை தயாரிக்கும் சீனத் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மீது கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலேயே அவரகள் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இன்று(05) 51 பேரையும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.