நடிகைகளில் ஒரு சிலர் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றனர். நடிகை சமந்தா ஏழை குழந்தைகளின் வாழ்வாதாரம் மற்றும் மருத்துவ உதவிக்காக அறக்கட்டளை ஆரம்பித்து உதவி செய்து வருகிறார்.
நடிகை திரிஷா தெருநாய்களை பாதுகாக்க தனி அக்கறை எடுத்து செயல்பட்டு வருகிறார். கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் கவுதமி அமைப்பு ஆரம்பித்து பணியாற்றி வருகிறார். அந்த வரிசையில் நடிகை அமலாபால் இணைந்திருக்கிறார்.
சமீபத்தில் தனது கண்களை தானம் செய்தார் அமலாபால். பார்வையாற்றவர்களின் பாதிப்பை நேரில் கண்டறிந்தவர் அவர்களுக்காக உதவ தொண்டு அமைப்பை ஆரம்பித்து இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, 30 கோடி பேர் உலகம் முழுவதும் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் இவர்களில் 70 சதவீதம் பேர் முற்றிலுமாக பார்வையற்றவர்களாக இருக்கின்றனர். ஆனால் கண்களை தானம் செய்யபவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.
இந்த எண்ணிக்கை பெருகினால் இன்னும் எவ்வளவோ பேர் பார்வை பெற முடியும். கண் தானம் செய்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் ஒரு வருடத்துக்கு 40 ஆயிரம் அறுவை சிகிச்சை மட்டுமே செய்து பார்வையற்றவர்களுக்கு பார்வை வழங்கப்படுகிறது. எனது கண்களை நான் தானம் செய்ததோடு மட்டுமல்லாமல் அமலா ஹோம் என்ற அமைப்பையும் ஆரம்பித்து கண்தானம் எளிமையாக செய்வது எப்படி என்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளேன். இதற்காக நிதி திரட்டி தேவையானவர்களுக்கு உதவ இருக்கிறேன். இவ்வாறு அமலாபால் கூறினார்.