அண்மையில் பேஸ்புக் நிறுவத்தினால் இலங்கை உட்பட 06 நாடுகளில் பரீட்சித்து பார்க்கப்பட்ட facebook explore feed இன்று(06) முதல் நீக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த புதிய நடவடிக்கை தொடர்பில் facebook பயனாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளமையினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக குறித்த 06 நாடுகளின் பேஸ்புக் பயனாளர்களுக்கு தங்கள் நண்பர்கள் மற்றும் கட்டணம் செலுத்தப்பட்ட பதிவுகள் மாத்திரமே பேஸ்புக் பக்கங்களில் காட்டப்பட்டுள்ளதுடன், ஏனைய பகுதிகளுக்கு explore feed பகுதிக்கு செல்ல வேண்டும் என்ற வகையில் பேஸ்புக் மாற்றமடைந்தது.
எனினும், குறித்த பரீட்சார்த்த நடவடிக்கை காரணமாக பேஸ்புக் பக்கங்களுக்கான விருப்பங்கள் குறைவடைந்துள்ளதாகவும், அது இணையத்தளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#rishma