எதிர்வரும் மாகாண சபை தேர்தல் கலப்பு முறையில் நடாத்த திட்டம்….

எதிர்வரும் மாகாண சபை தேர்தலை கலப்பு முறையில் நடத்துவதற்கு தயாராக இருப்பதாக உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தலுக்கான எல்லை நிர்ணய பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதற்கு நாடாளுமன்ற அனுமதி மாத்திரம் பெறப்படவுள்ளது.

கலப்பு தேர்தல் முறையை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது.

எனவே கலப்பு தேர்தல் முறைமையின் கீழாகவே மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

#rishma