அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் எனவும், பின்னர் பாராளுமன்ற பொதுத் தேர்தலினை நடாத்த வலியுறுத்தியும் நாடளாவிய ரீதியாக நாளை(07) முதல் எதிர்ப்புப் பேரணிகளை முன்னெடுக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்திருந்த நிலையில் குறித்த பேரணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினை கருத்தில் கொண்டே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
#rishma