கண்டி நிர்வாக மாவட்டத்துக்குள் நேற்று(06) ஊரடங்கு சட்டம் அதுமுல்படுத்தப்பட்ட நிலையில், மெனிக்கின்ன பகுதியில் அசாதாரண சூழ்நிலைக்கு காரணமாக இருந்த 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த அசாதாரண சூழ்நிலையினால், மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சுமார் 400 பேர் கொண்ட குழுவினர் குறித்த பிரதேசத்தில் குழப்பம் விளைவிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டதாகவும், இதன்போது பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பொலிஸ் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
#riz