யுவதிகள் மீது கத்திக் குத்து: வெளிநாட்டவர் மீது துப்பாக்கிப் பிரயோகம்

ஹெவ்லொக் டவுன் பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இரண்டு யுவதிகளை கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்திய வெளிநாட்டவரை கட்டுப்படுத்துவதற்காக காவற்துறையினர் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் நேற்று இடம்பெற்றிருந்தது.
இத் தாக்குதலை நடத்தியவர் 41 வயதான லெபானான் நாட்டைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி பிரயோகத்தால் காயமடைந்த வெளிநாட்டவர் மற்றும் கத்தி குத்தால் காயமடைந்த இரண்டு யுவதிகளும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்த யுவதிகளில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.