இலங்கையில் தற்போது நிலவும் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை தொடர்பில் கவலை தெரிவித்திருக்கும் அமெரிக்கா, மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை பாதுகாத்து அவசரகால நிலையை விரைவில் முடிவுக்கு கொண்டு வருமாறு அரசாங்கத்திற்கு அமெரிக்கா அறிவுரை விடுத்துள்ளது.
இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றினை விடுத்து குறிப்பிட்டுள்ளது.
“..நாட்டின் அமைதியான சகவாழ்வுக்கு சட்ட ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் சமத்துவம் என்பன அத்தியாவசியமாகும்.
மதம் சார்பான பிரிவினைவாத வன்முறை சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் மத ரீதியான சிறுபான்மையினரையும் அவர்களது வழிபாட்டு தலங்களை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், அனைவரினதும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை பாதுகாக்கும் அதேநேரம், தற்போது நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால நிலையை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதற்கும் இலங்கை அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டியது முக்கியமாகும்..” என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
#####