தத்தமது பிரதேசங்களில் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்க ஒத்துழைப்பு நல்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலவரத்தின் முன்னிலையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேற்று(07) பிரதமர் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
முப்படைகளினதும், பொலிசாரினதும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு மத்திய பிரதேச பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மன் டயஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு அசாதாரண சூழ்நிலையையும் கட்டுப்படுத்தும் வகையில் தயாராக இருக்குமாறு பாதுகாப்புப் படைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
போலிப் பிரசாரங்களில் சிக்காமல் நாட்டில் அமைதியைப் பேணுவது முக்கியமானது. நாட்டில் பாதுகாப்பான சூழலை உருவாக்கி அமைதி பேண உதவுவமாறு அவர் சகல மக்களிடமும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.