தரனாகம குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகளை முன்னிட்டு போக்குவரத்து மட்டு…

ஸ்ரீ சம்போதி விகாரையின் விகாராதிபதி வணக்கத்துக்குரிய தரனாகம குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியை இன்று(08) சுதந்திர சதுக்கத்தில் அரச மரியாதைகளுடன் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, அவரது தேகமானது இன்று மதியம் 02.00 மணியளவில் ஸ்ரீ சம்போதி விகாரையிலிருந்து எடுத்து செல்லப்பட்டு 2.30 மணியளவில் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆதலால், குறித்த வீதிகளினூடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இவர் சுகயீனமுற்றிருந்த நிலையில், அவரது 54வது வயதில் கடந்த 03ம் திகதி இறையடி எய்தினார்.

 

#rishma