சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பாராளுமன்றத்தில் உள்ள பல்வேறு காட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு இனத்தை சேர்ந்த கட்சி தலைவர்களும் நாளை(10) கண்டிக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இதன்போது, கண்டி மாவட்ட மதத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வரும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களை அவர்கள் சந்திக்கவுள்ளனர்.
இதன் பிரதான கலந்துரையாடல் கண்டி முஸ்லிம் பிரதான வள்ளிவாசலில் நாளை(09) 11.00 மணியளவில் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து பாதிப்புகளுக்குள்ளான பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களை சந்திக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.