தென் மாகாண சபை உறுப்பினர் கசுன் மற்றும் அவரது மனைவி கைது…

தலங்கம பிரதேசத்தில் தனியார் பேருந்தொன்றின் சாரதியை தாக்கிய தென் மாகாண சபை உறுப்பினர்  எம்.கே .கசுன் மற்றும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெப் வண்டியில் பயணித்த குறித்த பெண் மற்றும் தென் மாகாண சபை உறுப்பினருக்கும், பேருந்து சாரதியுடன் ஏற்பட்ட வாய்த்தகராறு அதிகரித்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தலங்காம காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

குறித்த இந்த தாக்குதல் சம்பவத்தை இனந்தெரியாத நபரொருவர், தனது கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

#rish