ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து துருக்கி சென்ற விமானம் ஈரான் மலைப்பகுதியில் கீழே விழுந்து விபத்திற்குள்ளானதில், அதில் பயணம் செய்த 11 பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரான் மலைப்பகுதியில் பலத்த காற்று மற்றும் மழை பெய்து வருவதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் மலைப்பகுதியில் கீழே விழுந்து விமானம் தீப்பிடித்து எரிவதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக உள்ளூர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளதுடன், அவர்கள் மீட்புப் படையினருடன் அங்கு விரைந்து சென்று 11 பேரின் உடல்களை மீட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.