புதிய உள்ளுராட்சி மன்ற நிறுவனங்கள் இம்மாதம் 20ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் என மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களின் முதலாவது கூட்டம் பிரதி உள்ளுராட்சி மன்ற ஆணையாளரின் பங்களிப்புடன் இடம்பெறவுள்ளது. புதிய உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளை தெளிவுபடுத்துவற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொழும்பு மாநகர சபையின் முதலாவது கூட்டம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.