ஜனாதிபதிக்கும் ஜப்பானிய சக்கரவர்த்திக்குமிடையில் இன்று சந்திப்பு…

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பானுக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று(13) ஜப்பானிய சக்கரவர்த்தி அக்கி ஹித்தோவையும், பேரரசி மிச்சிக்கோவை சந்திக்கவள்ளார்.

ஜனாதிபதி , நாளைய தினம்(14) ஜப்பான் பிரதமரையும், சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை மீது தாக்கம் செலுத்தக்கூடிய அரசியல், சமூக, பொருளாதார விடயங்கள் குறித்து ஜனாதிபதி, ஜப்பானிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். இந்த விஜயம் இலங்கைக்கு கூடுதலான அனுகூலங்களைத் தருவதாக அமையும் என ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் தெரிவித்தார்.

ஜப்பான் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டமொன்றிலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி, ஜப்பானில் வசிக்கும் இலங்கை பிரஜைகளையும் சந்திக்கவுள்ளார்.