நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தி இருந்த அவசர காலநிலை எதிர்வரும் 15ம் திகதி முடிவுக்கு வரவுள்ள நிலையில், குறித்த அவசர காலநிலையினை மேலும் நீடிக்க தற்போது அவசியமில்லை என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளதாக குறித்த அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுவதாலும், மக்கள் வீணாக அச்சமடையத் தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக ஜனாதிபதியினால் கடந்த 06ம் திகதி முதல் பத்து நாட்களுக்கு அவசர காலநிலை பிரகடனப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#rishma