தென் மாகாண சபை உறுப்பினர் கசுன் மற்றும் அவரது மனைவியின் விளக்கமறியல் நீடிப்பு…

தலங்கம பிரதேசத்தில் தனியார் பேருந்தொன்றின் சாரதியை தாக்கிய தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே .கசுன் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் விளக்கமறியலை எதிர்வரும் 27ம் திகதி வரை நீடித்து கடுவல நீதிமன்றம் இன்று(13) உத்தரவு பிறப்பித்துள்ளது.

கெப் வண்டியில் பயணித்த குறித்த தென் மாகாண சபை உறுப்பினர் மற்றும் அவரது மனைவி, பேருந்து சாரதியுடன் ஏற்பட்ட வாய்த்தகராறு அதிகரித்து பேரூந்து சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

#rishma