சுவிட்சர்லாந்தை சேர்ந்த மாடல் அழகி மிலோ மொய்ரி (31). இவர் சுவிட்சர்லாந்து மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கு சென்று புகழ்பெற்ற இடங்களில் நிர்வாண செல்பி படம் எடுத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றார். பின்னர் ஈபிள் கோபுரம் சென்ற அவர் அதன் முன்பு உடம்பில் ஒட்டு துணி எதுவும் இன்றி முழு நிர்வாணமாக நின்று ‘செல்பி’ படம் எடுத்தார். அதுமட்டுமின்றி ஈபிள் கோபுரத்துக்கு கீழேயுள்ள டிரோகடோரா பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுடன் சேர்ந்து நிர்வாணமாக செல்பி எடுத்தார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். பிரான்ஸ் நாட்டில் ஆண்களும், பெண்களும் அந்தரங்க உடல் உறுப்பு தெரியும் வகையில் பொது இடங்களில் உலா வந்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 15 ஆயிரம் யூரோக்களும் அபராதமாக விதிக்கப்படும். ஆனால் இவர் சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர் என்பதால் அவரிடம் அபராதம் எதுவும் வசூலிக்காமல் ஒரு இரவு மட்டும் காவலில் வைத்து விட்டு மறுநாள் அவரை போலீசார் விடுதலை செய்தனர்.