பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அமைச்சர்களிடம் இருந்து கையொப்பம்….

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

இதற்கு ஆதரவாக கையெழுத்து பெறும் நடவடிக்கைகளும் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் சிலரும் கையொப்பம் இடுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமருக்கு எதிரான குறித்த இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த வாரமே சபாநாயகரிடம் கையளிக்கப்படவிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#Rishma