இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று மோதுகின்றன…

இலங்கை, இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்குகொள்ளும் சுதந்திர கிண்ண முக்கோண இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் ஐந்தாவது போட்டி இன்று(14) கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

தற்போதைய நிலையின் படி, புள்ளிப்பட்டியலில் இந்திய முதலிடத்திலும்,
இரண்டாம் இடத்தில் இலங்கையும் மூன்றாம் இடத்தில் பங்களாதேஷ் அணியும் இருக்கின்றன.

இருப்பினும் இலங்கை அணிக்கு இன்னும் ஒரு போட்டி மாத்திரமே எஞ்சியுள்ளது.

பங்களாதேஷ் அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

###