பாராளுமன்ற உறுப்பினர் பதவியினையும் இராஜினாமா செய்கிறார் மாவை சேனாதிராஜா…

நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் பிரதான அமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவை களமிறக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் பிரகாரம், அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினையும் இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறே அவர் குறித்த பதவியினை இராஜினாமா செய்வாராயின் அவரது பதவி வெற்றிடத்திற்கு அருந்தபனை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

-Rishma