கண்டி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக நிலவிய அசாதாரண நிலைமையை அடுத்து, சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் வைபர் போன்றனவுக்குத் தடை விதிக்கப்பட்டு முடக்கப்பட்டன.
இதில் வட்ஸ்அப் சேவை இன்று(14) நள்ளிரவு முதல் வழமைக்கு திரும்பும் என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ இன்று(14) தெரிவித்துள்ளார்.
மேலும், இவற்றில் வைபர் சேவை நேற்று(13) நள்ளிரவு முதல் வழமைக்கு திரும்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
-Rishma