Facebook தடையினை நீக்கும் தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று…

கடந்த 07ம் திகதி முதல் தற்காலிகத் தடைக்கு உள்ளாகிய முகநூல் (பேஸ்புக்) தடையை நீக்குவது குறித்த முக்கியமான தீர்மானம் இன்று(15) மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்காக இலங்கை வந்துள்ள முகநூல் நிறுவனத்தின் பிரதிநிதிகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தணிக்கையை மேற்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதுள்ள நிலையில், குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன கருத்துக்களுள் இனவன்முறைகளை தூண்டுவனவற்றை அடையாளம் கண்டு நீக்குவதற்கான முறைமையை அமுலாக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த இந்த விடயங்களில் இன்று(15) இணக்கம் காணப்படும் பட்சத்தில், நாளை(16) முதல் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.